அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் இங்­கி­லாந்து வரு­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து அனுப்­பப்­பட்ட பலூன் ஒன்று தற்­போது வளிமண்­ட­லத்­திற்கு மேலே சுற்றிக் கொண்­டுள்­ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ட்ரம்ப் இங்­கி­லாந்­துக்கு சுற்­றுப் ­ப­யணம் மேற்­கொண்டார். அப்­போது அவ­ரது வரு­கைக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் பரு­வ­நிலை தொடர்­பாக ஆய்வு செய்யும் பலூனில் “பேபி ட்ரம்ப்” எனப்­படும் ட்ரம்பின் உருவம் தாங்­கிய பலூன் ஒன்று பறக்­க­வி­டப்­பட்­டது.

ஹீலியம் வாயு நிரப்­பப்­பட்ட அந்த பலூன் வளி­மண்­ட­லத்­துக்கும் மேலாக பறந்து சென்­றது. தற்­போது அந்தப் பலூன் பூமி­யி­லி­ருந்து சுமார் 40 கிலோ மீற்றர் உய­ரத்தில் பறந்து கொண்­டுள்­ள­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. 

மேலும், பலூன் அருகே பொருத்தப்­பட்­டி­ருக்கும் கெமராவின் மூலமே இந்த விடயம் கண்டறியப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.