இந்த இருசந்தேகநபர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரியுள்ள பொலிஸார்!

ஈஸ்டர் ஞாயிறு தினமான கடந்த 21ஆம் திகதி கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார், நீர்கொழும்பு புனித செபஸ்தியார் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயங்கள் உட்பட பல இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்தன.

அன்றைய தினம் பதுளை புனித மரியாள் தேவாலயம் மற்றும் மார்க் தேவாலயங்களில் குண்டு வெடிப்பு நடத்தப்பட இருந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்பை மேற்கொள்ள வந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்கள் நடமாடும் காட்சிகள் இந்த தேவாலயங்களில் உள்ள பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன.