வவுனியாவில் உணவகத்தில் ஆயுதங்கள் மீட்பு

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா  குற்றத்தடுப்பு பொலிசார்,புளியங்குளம் விசேட அதிரடிப்படையினர்,இராணுவத்தினர் இணைந்து நேற்று மாலை விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன் போது  முஸ்ஸிம் உணவகத்தின் விடுதி மற்றும் மலசல கூடத்தினை சோதனையிட்ட சமயத்தில் மலசலகூடத்தில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு கைக்குண்டு , மூன்று மிதிவெடி,பதினைந்து தோட்டாக்கள் , இரண்டு ஆர்பிஜி குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களை கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ள  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் குறித்த நிலையத்தின் உரிமையாளரை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த உணவகம் தொடர்பாக அண்மைகாலமாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exif_JPEG_420
Exif_JPEG_420