“பெண்களை காதல் செய்ய சொல்லி கட்டாயப்படுத்த ஆண்களுக்கு உரிமையில்லை!” – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி 

பெண்களை காதல் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தவோ அல்லது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தவோ எந்த ஆணுக்கும் உரிமையில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார். 

சென்னை திருவான்மியூரில் திருமணம் செய்ய மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய கவின் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கவின் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெடங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.