இடம்பெயர் முகாம்களில் மக்கள் தடுத்து வைக்கப்படுவதனை ஏற்க முடியாது – ஜே.வி.பி.

02-05-2009 – ஈழம் 247

இந்த செய்தி இன அழிப்பு இடம் பெற்று 10 வருடம் கடந்ததை நினைவூட்டும் வகையில் மீள் பதிவிட படுகின்றது (மே 1- மே19)

விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரும் மக்களை தடுத்து வைக்கப்படும் செயன்முறை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.வன்னி அகதிகளை அரசாங்கம் தனது தேர்தல் வெற்றிக்கான ஓர் கருவியாக பயன்படுத்தி வருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. 

பொதுமக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அகதிகளைப் பார்வையிட அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

வடக்கு இடம்பெயர் மக்களுக்கு சேவையாற்ற ரத்து பலகாய என்ற தமது கட்சியின் தன்னார்வ தொண்டுப் பிரிவு தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

வன்னி மக்கள் பெரும் மன உலைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாக அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.