மட்டக்களப்பில் பாரிய தாக்குதல் நடத்த திட்டம்! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

மட்டக்களப்பில் பாரிய தாக்குதல் நடத்துவதற்காக குண்டு நிரப்பிய லொறி குறித்து கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள், பாடசாலைகள் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குண்டு நிரப்பிய லொறியை கண்டுபிடிக்க பாதுகாப்பு தரப்பினர் விசேட தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த குண்டு லொறி குறித்து கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாதுகாப்பு காவலரண்கள் மற்றும் வீதி சோதனையில் ஈடுபடும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை இந்த குண்டு தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.