தேர்தலுக்கு முன்னர் முற்றாக பயங்கரவாதத்தை ஒழிப்பேன் – ஜனாதிபதி

நாட்டின் நிலைமைகளினால் தேர்தலை பிற்போட முடியாது, ஆகவே நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு முன்னர் நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பேன். பயங்கரவாதத்தை ஒழிக்க எமது முப்படைகளுக்கும், புலனாய்வுத்துறைக்கும் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச ஊடக சேவை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியுள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டதகாக 130 உறுப்பினர்கள் இலங்கையில் உள்ளனர் என்ற தகவல் எமக்குக் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் நகர்வுகளில் முக்கியமான நபர்கள்  சிலர் கொல்லப்பட்டனர். அதற்கும் அப்பால் பலர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் . கொல்லப்பட்டவர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டவர்கள் தவிர இன்னும் சிலர் உள்ளனர். அவர்களும் கைதுசெய்யப்படுவார்கள். அனேகமாக இன்னும் 25 -30 நபர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் தேசிய பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் சர்வதேச முதலீடுகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர முடியும் எனவும்  அவர் குறிப்பிட்டார்.