கேரளாவில் இலங்கையர் ஒருவர் கைது

இலங்கையில் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் சிலருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில், கடவுச்சீட்டு இல்லாது தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கடந்த 75 நாட்களாக கேரளாவில் தங்கியிருந்ததாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இந்தியாவின் காஷ்மீர் மற்றும் கேரளாவில் பயிற்சி பெற்று இருக்கலாம் என இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயக அண்மையில் பிபிசி செய்தி சேவையிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே 30 வயதான இலங்கையர் கேரளாவில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநில காவற்துறையினர் அளித்த தகவலையடுத்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் தற்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.