மலையகப் பாடசாலைகளும் ஆரம்பம்!!

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து மலையகத்தில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இரண்டாம் தவனைக்காக இன்று ஆரம்பிக்கப்பட்டன.

பொலிஸார் மற்றும் இரானுவத்தினரின் பலத்த பாதுகாப்புடனும், பெற்றோர்களின் ஒத்துழைப்புடனும்
மாணவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாடசாலைகளுக்குள் உள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

அனைத்து பாடசாலைகளிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.