பழி­வாங்க வேண்­டாம்- மகிந்தவின் கோரிக்கை!!

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்­குப் பழி­வாங்­கும் வகை­யில் நீர்­கொ­ழும்­பில் வன்­முறை கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்­ளன என்று எமக்­குத் தக­வல் கிடைத்­துள்­ளது.

பழி­வாங்­கும் பட­லம் வேண்­டவே வேண்­டாம். மூவின மக்­க­ளும் ஒற்­று­மை­யாக வாழ்­வ­தையே நாம் விரும்­பு­கின்­றோம்.

இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நேற்­றி­ரவு தெரி­வித்­தார்.

இந்த வன்­மு­றை­யில் யார் ஈடு­பட்­டி­ருந்­தா­லும் அவர்­கள் அனை­வ­ரை­யும் அரசு கைது­செய்ய வேண்­டும் என­வும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.