தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கி உதவிய வர்த்தகர்கள்!!

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்புக்கு பில்லியன் கணக்கில் சொத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு கோடிக்கணக்கான நிதியை வழங்கியுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் பலரை இனங்கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நகை வர்த்தகரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல வர்த்தகர்கள் கைது செய்யப்படவுள்ளனர். சம்பந்தப்பட்ட வர்த்தகர்களின் வங்கி வைப்புக்களும் சோதனைக்குட்படுத்தப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.