பாதுகாப்பில் சந்தேகம் ஏற்பட்டால் வெசக்கிற்கு பின்னரே கத்தோலிக்க பாடசாலைகள் திறக்கப்படும்

பாதுகாப்பு படைகளின் தொடர் தேடுதல் நடவடிக்கைகளில் மீட்கப்படும் வாள் மற்றும் வெடிப்பொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் நாட்டில் பாதுகாப்பு குறித்து சந்தேகங்களையே ஏற்படுத்துகின்றது. இந்த நிலை தொடருமாயின் வெசக் முடிந்த பின்னரே கத்தோலிக்க பாடசாலைகள் திறக்கப்படும் என பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அவர் அதனை குறிப்பிட்டார்.