வைத்தியசாலையில் மனைவி: 14 வயது சிறுமியை தனது ஆசைக்கு அடிமையாக்கிய 62 வயது கொடூரன்..!

14 வய­தான சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த குற்­றச்­சாட்டில் 62 வய­தான உற­வினர் ஒரு­வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பாதிக்­கப்­பட்ட குறித்த  சிறுமி தனது தாய் மற்றும் சகோ­த­ர­னுடன் வீட்டில் வசித்து வந்­துள்ள நிலையில் சம்­பவ தினம் தாய் வேலைக்குச் சென்­றி­ருந்­த­தா­கவும், சந்­தேக நப­ரான பாட்­டனின் மனைவி சுக­யீனம் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளதாகவும், இந்நிலையில் அன்­றி­ரவு பாதிக்­கப்­பட்ட சிறுமி உறங்கச் சென்­ற வேளையில் அச்­சி­று­மியை குறித்த சந்தேக நபரான பாட்டன் முறை­யா­னவர் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதனை அவ­தா­னித்த சிறு­மியின் சகோ­தரன் அய­ல­வர்­க­ளிடம் கூறி பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கி­யதால் குறித்த பாட்­டனைக் கைது செய்­த­தாக பொலிஸார் தெரி­வித்­துள்ளதுடன், பாதிக்­கப்­பட்ட சிறு­மி பரி­சோ­த­னைக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபரை குளி­யா­பிட்டி நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­திய போது அவரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.