ஹிஸ்புல்லாவை பதவி நீக்கக் கோரி கிழக்கு மாகாணத்தில் ஹர்தால் போராட்டம்

கிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டம் கிழக்கினை பாதுகாக்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக இன்று திருகோணமலை நகரத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு காணப்படுகின்றது.

பள்ளிவாயில்களுக்கு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளதுடன், அரச பேருந்துகள் மாத்திரம் சேவையில ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை நகர் பகுதியில் பேருந்து ஒன்றிற்கு கல்வீச்சு இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.