ஊரடங்கு அமுல் செய்துவிட்டு முஸ்லிம் மக்களை கொடுமை படுத்தும் இராணுவம்

இலங்கையில் கடந்த மாதம் 21ம் திகதி இடம் பெற்ற தொடர் குண்டு தாக்குதலை அடுத்து இலங்கையில் பதற்ற நிலை காணப்படுகின்றது.

ஒரு சில தீவிர வாத அமைப்புகள் செய்த மத அழிப்பிற்கு முஸ்லீம் மக்களையும், அவர்களின் உடைமைகளையும் அழிக்கும் ஒரு சில சிங்களவர்கள்/ ஏவி விட்டவர்களுக்கு இலங்கை இரணுவம் பாதுகாப்பு கொடுக்கும் நிலைமை இலங்கையில் இடம் பெற்று வருகின்றது. இதனை வீடியோக்கள் மூலம் அறியமுடிகின்றது.

ஊரடங்கு சட்டம் அமுல் செய்துவிட்டு இந்த கொடுமை இரவு இரவாக இடம் பெற்று வருகின்றது.

திங்கட்கிழமை வெடிக்கும் என்றார் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஆனால் அவர் குண்டு வெடிக்கும் என்கிறார் என்றே நினைத்தோம். இருப்பினும் அவர் கலவரம் வெடிக்கும் என்பதையே கூறிபிட்டுள்ளார்.

குண்டு வெடிப்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. கலவரம் வெடிக்கும் என்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் பாவம் மக்களுக்குத்தான் எதுவும் தெரியவில்லை.

தாக்குதலில் காயப்பட்ட, உறவுகளை இழந்த கிறிஸ்தவர்கள் “ ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு “ என்ற வேதாகம வசனத்தில் உள்ளபடி எந்த வித எதிர் தாக்குதலையும் நடாத்த வில்லை.. ஆனால் இராணுவ பாதுகாப்புடன் சிங்களவர்கள் வேண்டும் என்றே மக்கள் மீது வண்முறையில் ஈடுபட்டுவருகின்றனர்.