மே 18 நினை­வேந்­த­லுக்கு- இடையூறு இருக்காது!!

மே 18 நினை­வேந்­த­லைக் கடைப்­பி­டிக்க தமிழ் மக்­க­ளுக்கு முழு­மை­யான சுதந்­தி­ர­மும் உரி­மை­யும் உண்டு. அவர்­க­ளால் மேற்­கொள்­ளப்­ப­டும் நினை­வேந்­த­லுக்கு இரா­ணு­வம் எவ்­வித இடை­யூ­றும் கொடுக்­காது என்று தெரி­வித்­தார் இரா­ணு­வத் தள­பதி லெப்­டி­னன் ஜென­ரல் மகேஸ் சேன­நா­யக்க.

சமா­தா­னத்­தின் தசாப்த நிறைவு தினம் என்ற பெய­ரில் போர் வெற்­றிக் கொண்­டாட்­டங்­கள் இந்த முறை­யும் இரா­ணு­வத்­தி­னாரால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­மையை முன்­னிட்டு கொழும்­பில் நேற்று வியா­ழக்­கி­ழமை நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

அவர் மேலும் தெரி­வித்­தா­வது:இலங்­கை­யில் நடை­மு­றை­யி­லுள்ள சட்­ட­வி­தி­க­ளுக்கு உட்­பட்டு, நினைவு தினத்­தைக் கடைப்­பி­டிப்­ப­தற்­கான உரிமை அனை­வ­ருக்­கும் காணப்­ப­டு­கி­றது. இலங்­கை­யில் அவ­ச­ர­கால சட்­டம் நடை­மு­றை­யில் உள்ள தரு­ணத்­தில், இவ்­வா­றான நினைவு தின நிகழ்­வு­களை நடத்­து­கின்­றமை சர்ச்­சைக்­கு­ரிய விட­யம் என்று பேசப்­ப­டு­கின்­றது. உண்­மை­யில் அவ­ச­ர­கால சட்­ட­மும், நினைவு தின கடைப்­பி­டிப்­பும் இரு­வேறு விட­யங்­கள். நினைவு தினத்தை உரிய விதி­மு­றை­க­ளின் கீழ் முன்­னெ­டுக்­க­லாம் – என்­றார்.

ஈஸ்­டர் தாக்­கு­தல் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த அவர்:
இலங்­கை­யில் மற்­று­மொரு பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான சாத்­திய கூறு­கள் கிடை­யாது. பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் பலப்­ப­டுத்­தப்­பட்டு, கைது நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பயங்­க­ர­வா­தத்தை முழு­மை­யாக ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. புத்­த­ளம் – நாத்­தாண்டி – துன்­மோ­தர பகு­தி­யில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல் சம்­ப­வத்­து­டன் ராணு­வத்­திற்கு எந்­த­வித தொடர்­பும் கிடை­யாது – என்று மேலும் தெரி­வித்­தார்.