நீர்கொழும்பிலிருந்த வெளிநாட்டு ஏதிலிகள்- யாழ்ப்பாணத்தில் தஞ்சம்!!

நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட வெளி­நாட்டு ஏதி­லி­கள் வவு­னி­யா­வைத் தொடர்ந்து யாழ்ப்­பா­ணத்­துக்­கும் அழைத்து வரப்­பட்­டுள்­ள­னர். யாழ்ப்­பா­ணத்­தில் ஓர் வீட்­டில் அவர்­கள் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

பாகிஸ்­தான் மற்­றும் ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து இலங்­கைக்கு வந்த ஏதி­லி­கள், நீர்­கொ­ழும்­பில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­த­னர். கடந்த ஏப்­ரல் 21ஆம் திகதி தற்­கொ­லைக் குண்­டு­வெ­டிப்­புக்­க­ளை­ய­டுத்து, ஏதி­லி­கள் நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து விரட்­டப்­பட்­ட­னர்.

அவர்­கள் பொலிஸ் நிலை­யத்­தி­லும், தற்­கா­லிக இருப்­பி­டங்­க­ளி­லும் சிர­மங்­க­ளுக்கு மத்­தி­யில் தங்க வைக்­கப்­பட்­ட­னர். அவர்­களை வடக்­குக்கு அழைத்து வந்து தங்க வைப்­ப­தற்கு அரசு முயற்­சி­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. இதற்கு உள்­ளூ­ரில் கடும் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டது.

இதே­வேளை, கடந்த வெள்­ளிக்­கி­ழமை வெளி­நாட்டு ஏதி­லி­கள் வவு­னி­யா­வுக்கு அழைத்து வரப்­பட்­ட­னர். அவர்­கள் அங்கு மறு­வாழ்வு முகா­மில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்த நிலை­யில், யாழ்ப்­பா­ணத்­துக்கு வெளி­நாட்டு ஏதி­லி­கள் நேற்று அழைத்து வரப்­பட்­டுள்­ள­னர். முதல் கட்­ட­மாக இரண்டு குடும்­பங்­கள் யாழ்ப்­பா­ணத்தை வந்­த­டைந்­துள்­ளன. அவர்­கள் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் பதி­வு­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.