அடுத்த மாதம் முதல் இலங்கையில் 5G

ஆனி மாதம் முதல் இலங்கையின் மொபிடல் நிறுவனம் 5G தொழிநுட்பத்தை மக்கள் பாவனைக்கு வழங்க தீர்மானித்து வருவதாக அவ் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் எமக்கு செய்திவழங்கியுள்ளார்.

தற்போது புதிய தொலைபேசிகளில் அதிகமானவை 5G தொழில்நுட்பத்தில் வெளியாகின்றன. மேலும் ஐப்பசி மாதம் 12ம் திகதி அப்பிள் நிறுவனம் தனது முதல் 5G தொலைபேசியை அறிமுகம் செய்யவுள்ளது.

அதற்கு முன்னதாக இலங்கையில் முக்கியமான நகரங்களில் 5G அறிமுகம் செய்யும் பணி இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தென்னாசியாவில் 5G தொழிநுட்பத்தை பயன்படுத்தும் மற்றும் அறிமுகம் செய்த நாடுகள் வரிசையில் இலங்கை முதல் இடத்திலுள்ளது.