நீதிமன்ற அனுமதியுடன் புலிச் சீருடையுடனான எலும்புக் கூடு மீட்பு!!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் 681 ஆவது படை தலைமையகத்துக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் மலசல கூடம் அமைப்பதற்காக தோண்டிய போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

நீதிமன்ற அனுமதியுடன் குறித்த எலும்புக்கூட்டை தோண்டி எடுக்கும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் தடய மீட்பு பொலிஸார் தோண்டும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.