முல்லைத்தீவில் படையினர் அணிவகுப்பு!!

படையினரின் போர் வெற்றியை நினைவுகூரும் வகையிலான படை அணிவகுப்பு முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் நடைபெற்றது.

போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், போரில் உயிரிழந்த படையினருக்கு மரியாதை செய்யும் வகையில் அணிவகுப்பு இடம்பெற்றது.

முல்லைத்தீவு நகர்ப் பகுதியில் நீதிமன்றத்துக்கு அருகாமையில் உள்ள 59 ஆவது படையினரின் தலைமையகத்தில் இருந்து ஆரம்பமான அணிவகுப்பு, முல்லைத்தீவு நகர்ப் பகுதி சுற்றுவட்ட பாதை ஊடாக கடற்கரை வரை சென்றடைந்து பின்னர் அங்கிருந்து கடற்கரை வீதியாக முல்லைத்தீவு இராஜப்பர் தேவாலயம் வரை சென்றடைந்தது.