அமெரிக்கா ஈரான் யுத்தம் சாத்தியமா? அமெரிக்க மக்கள் கருதுவது என்ன?

அடுத்த சில வருடங்களில் அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெறும் என அதிகளவான அமெரிக்கர்கள் எதிர்பார்ப்பது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

ரொய்ட்டர் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் மூலம் அமெரிக்கர்களின் இந்த அச்சம் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.

ஈரான் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக காணப்படுகின்றது என கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதிகளவான அமெரிக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்கா முன்கூட்டிய தாக்குதலை மேற்கொள்வதற்கு குறைந்தளவானவர்களே விருப்பம் வெளியிட்டுள்ள அதேவேளை ஈரான் தாக்குதலை மேற்கொண்டால் அமெரிக்கா தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என பல அமெரிக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் ஈரான் விவகாரத்தை கையாளும் விதம் குறித்து 49 பேர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

31 வீதமானவர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள அதேவேளை 39 வீதமானவர்கள் டிரம்பின் கொள்கைக்கு ஆதரவளித்துள்ளனர்.

51 வீதமான அமெரிக்கர்கள் அடுத்த சில வருடங்களில் அமெரிக்காவும் ஈரானும் யுத்தத்தில் ஈடுபடுடலாம் என கருத்து வெளியிட்டுள்ளனர்.இது கடந்த வருடத்தை விட 8 வீதம் அதிகமானதாகும்.

53 வீதமான அமெரிக்கர்கள் ஈரான் பாரதூரமான அச்சுறுத்தல் அல்லது உடனடி அச்சுறுத்தல் என கருத்து தெரிவித்துள்ளனர்.

60 வீதமான அமெரிக்கர்கள் அமெரி;க்கா முன்கூட்டிய  தாக்குதலை மேற்கொள்ளகூடாது என கருத்து வெளியிட்டுள்ளனர்.