பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு நல்லூரில் திரண்ட இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் மதில் பாய்ந்து ஓட்டம்!!

நண்பனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொலிஸாரைக் கண்டதும் தப்பியோடியுள்ளனர்.

நல்லூர் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்திக்கு அண்மையாகவுள்ள விடுதி ஒன்றில் வாள்வெட்டுக் குழுவுடன் தொடர்புடைய நபரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு நண்பர்கள் ஒன்று கூடியனர்.

தகவல் அறிந்த பொலிஸார், விடுதிக்குள் ர் நுழைந்தனர். எனினும் பொலிஸார் உள்நுழைவதை அறிந்த முக்கிய சந்தேகநபர்கள் விடுதியின் பின்பக்க மதிலால் பாய்ந்து தப்பி ஓடியுள்ளனர். அங்கிருந்த சுமார் 30 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஐந்து பேரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் நடந்த வன்முறைகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்களே தப்பி ஓடியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்