ஹிஸ்புல்லாவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள பொலிஸ் உயர் அதிகாரயின் படமும் சிக்கியது

சஹரான் தலைமையிலான பயங்கரவாதிகள் காத்தான்குடியில் பயிற்சியில் ஈடுபட்ட போது, அதுகுறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க கல்முனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தவறியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த செவ்வாய்கிழமை இரவு சந்தித்து பேசிய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி குறித்த விடயம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தால், கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் எனவும் எஸ்.வியாழேந்திரன், ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், குறித்த பொலிஸ் அதிகாரி கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுடன் நெருக்கமாகவுள்ளதாகவும், இதன்காரணமாக அவர் பக்கச்சார்பான முறையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் எஸ்.வியாழேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இவரே காத்தான்குடியின் பல சட்டவிரோத செயற்பாடுகளிற்கும் உடந்தையாக இருப்பதுடன் அப்பாவி காத்தான்குடி மக்களை துன்பப்படுத்திதான் நினைத்தால் போல் ரவுடிகளை ஹிஸ்புல்லாவுடன் இணைந்து வளர்க்கும் மிகப் பெரும் மாபியா என அப்பகுதி மக்கள் மேலும் கூறுகின்றனர்.