றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான் சிக்கியது மேலும் சில ஆதாரங்கள்!!

வவுனியாவில் பல தமிழ் கிராமங்கள் அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் அமைச்சரின் உறுதுணையுடன் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் கடந்தவாரம் ஊடகங்களில் ஆதாரங்களுடன் செய்தி வெளியாகியிருந்தது.தற்போது மேலும் சில ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வவுனியா மடுக்குளம்  பகுதியில் உள்ள  அலியா மருதமடு குளத்தின் கீழ்வரும் காணிகளை அப்பிரதேச மக்களை ஏமாற்றி காணிகளை அபகரிப்பதோடு அதில் முஸ்லீம் மக்களை குடியேற்றி தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் முயற்சிகள் நடந்தேறிவருகின்றது.

இப்பிரதேசங்களை ஒரு போதும் சேர்ந்திராத பிரதேச செயலாளரின் மனைவியின் உறவினர்கள் அண்ணனின் உறவினர்கள்,நன்பர்கள் என ஏறத்தாழ நூறு பேருக்குமேல்  இவ்வாறு  காணி அனுமதிப்பத்திரங்கள் பதியப்பட்டு வவுனியா பிரதேச செயலாளரினால் கையகப்படுத்தப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிருபிக்கபட்டுள்ளது.

பிரதேச செயலாளருக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் தனது கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான காணிகளை அவர்களின் பெயரில் பதிந்து பின்பு LDO காணிப்பத்திரங்களுக்கான உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றதும் முஸ்லீம்மக்களின் பெயரில் மாற்றம் செய்யும்  றிசாட் அமைச்சரின்  திட்டம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் பல ஆதாரங்கள் நாளாந்தம் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

மேலும் நோச்சிமோட்டை,மடுக்குளம் காணிகள் மட்டுமல்லாது வடக்கின் பல தமிழர் கிராமங்களும் இந்த சதித்திட்ட வலைக்குள் வீழ்ந்துள்ளதாக அறியமுடிகிறது.

வவுனியா பிரதேச செயலாளரின் குறித்த முறையற்ற காணி சுவீகரிப்பு நடவடிக்கை தொடர்பாக ஆதாரபூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஹனீபா அவர்களிடமும் தெரிவித்திருந்த போதும். குறிப்பிட்ட அமைச்சரின் தலையீடு காரணமாக எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 

மேலும் இவ் பிரதேச செயலாளருக்கு எதிராக வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவிலும் பிரதேச மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு எதிர்வரும் நாட்களில் குறித்த அமைச்சருக்கும் பிரதேச செயலாளருக்கும் எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.