வடக்கு,கிழக்கில் மூன்று காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள்! அடுத்தமாதம் பணிகள் ஆரம்பம்

நாட்டில் அதிகரித்துவரும் மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் தேசிய மின் கட்டமைப்புக்கு 700 மெகா வோற்ஸ் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் வடக்கு கிழக்கில் அடுத்த மாதம் மூன்று காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதன்படி வடக்கில் மன்னார்,பூநகரி ஆகிய இடங்களிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் இந்த காற்றாலை மின் உற்ப த்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சக்தி எரிசக்தி அமைச்சின் தகவலின்படி மன்னார் மற்றும் பூநகரியில் அமைக்கப்படும் காற்றாலை மின் உற்பத்திமூலம் 300 மெகாவோற்ஸ் மின்சாரமும் மட்டக்களப்பில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி மூலம் 100 மெகாவோற்ஸ் மின்சாரமும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

இந்த மின் உற்பத்திநிலையங்களை அமைக்க மின்சக்தி அமைச்சு சர்வதேச நிறுவனங்களிடம் கேள்வி கோரலை முன்வைத்துள்ளது.