ஜனாதிபதியின் முகநூல் கணக்கில் திடீரென ஒளிபரப்பப்பட்ட நேரலை! ஜனாதிபதிக்கே தெரியாதாம்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கு முடக்கப்பட்டு நேரலையாக காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது.

ஐந்து நிமிடங்களுக்கு வாகனப் போக்குவரத்து தொடர்பான காட்சி ஒன்றே ஒளிபரப்பப்பட்டது.

திடீரென நேரலை காணொளி ஒன்று பதிவேற்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முகநூல் கணக்கை முடக்கி நுழைந்த யாரேனும் இந்த பதிவை இட்டனரா அல்லது, சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவினால் தவறுதலாக இந்த பதிவேற்றம் நிகழ்ந்ததா என்று சம்பந்தப்பட்ட தரப்பினரே விசாரிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.