யாழ்.குடாநாட்டில் 102 இந்து ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரவேசிக்க அதிரடி தடை!

யாழ்குடா நாட்டின் வடமராட்சி, தென்மராட்சி மற்றும் தீவகம் போன்ற பகுதிகளில் உள்ள 102 இந்து ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயங்களுக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர யாழில் மேலும் பல இந்து ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயங்களுக்குள் பிரவேசிக்க தடைவித்தகப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஸ்தாபகர் முருகேசு சந்திரகுமார் இந்த விடயம் தொடர்பாக வெட்கமடைவதாகவும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் அமைந்துள்ள சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் முப்பது வருடங்களாக திருவிழா இடம்பெறாதிருந்த நிலையில், கடந்த வருடம் திருவிழா இடம்பெற்றிருந்தது.

எனினும் தேர் திருவிழாவின்போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் எனக் குறிப்பிட்டு பக்தர்களை, வடம் பிடிக்க அனுமதிக்காது ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தேர் இழுக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் பின்னணியில் இவ்வருட திருவிழாவை நடாத்தாது ஆலய நிர்வாகத்தினர் நிறுத்தி வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஸ்தாபகர் முருகேசு சந்திரகுமார் மேற்கண்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.Page 2 of 2

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவால் நிர்வகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படும் ‘மட்டக்களப்பு பல் கலைக்கழகம்’ என்ற தனியார் நிறுவனம் தொடர்பில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளதாக கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு தொடர்பிலான நாடாளுமன்ற கண்காணிப்பு செயற்குழு தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டுள்ள கடன் ஒப்பந்தங்களின் உள்ளடக்கம் தொடர்பில் இந்த சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக, அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவி த்துள்ளார்.

குறித்த பல்கலைக்கழக நிர்மாணத்துக்காக சவுதி அரேபியர்கள் சிலருடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ள்ளமை தெரியவந்துள்ளது.

எனினும், குறித்த நிறுவனத்துக்காக வங்கி கடன் பெற்றுக்கொள்ளப்பட்டபோது இந்த விடயம் குறிப்பிடப்பட வில்லை என்பது தெரியவந்துள்ளதாக ஆஷூ மாரசிங்க கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் ‘Batticaloa Campus’ தனியார் நிறுவனத்துக்கு பணம் பெற்றுக்கொள்ளப்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்காக 5 அரச நிறுவனங்கள் நேற்று கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு தொட ர்பிலான நாடாளுமன்ற கண்காணிப்பு செயற்குழுவின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தன.

இலங்கை வங்கி, இலங்கை மத்திய வங்கி, முதலீட்டு சபை, உயர்கல்வி அமைச்சு, மகாவலி அதிகாரசபை, நிறுவன பதிவாளர் திணைக்களம் மற்றும் பிரதேச செயலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, ‘Batticaloa Campus’ ஐ அரச பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக அறிவிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினால் தனிநபர் பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.