ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து 120 நாட்களுக்கு கூட்டு எதிரணி செய்யப்போகும் செயல்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து இன்று முதல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த பிரச்சாரம் இன்று முதல் 120 நாட்களுக்கு நடைபெறவுள்ளன. 

எம்பிலிபிட்டியவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி சிறிலங்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.