உண்ணாவிரதத்தை நிறைவு செய்த வியாழேந்திரன்!

ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் அசாத்சாலி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை தொடர்ந்து மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன் கடந்த மூன்று நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர் சா. வியாழேந்திரன் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த அடையாள உண்ணாவிரதம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இன்று பொலனறுவை திம்புலாகலை அம்பாறை, தெய்யத்த கண்டிய பகுதிகளில் இருந்து வருகை தந்த பௌத்த பிக்குகள் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு தண்ணீர் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.