ஈழத்து மீனவர் இவர் கடலில் மாயம்

யாழ்ப்பாணம் காரைநகர் சாம்பலோடை கடற்கரைப் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக காரைநகர் கடற்படை தெரிவித்தனர். நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் சுப்பர் யாகலை படகில் இரு இளைஞர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற நிலையிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
காணாமல் போன இளைஞர்கள் இருவரும் காரைநகர் நகர் பகுதியைச் சேர்ந்த

கோடிஸ்வரன் குகபிரியன் (23) விக்காவில் காரைநகர்,

தவராசா சத்தியராஜ்(25) வெடியரசன் வீதி காரைநகர்

யாழ் காரைநகர் சாம்பலோடை கடற்கரை பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை மீன் பிடிக்க சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக காரைநகர் கடற்படையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்