முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக ரிசாத் எம்.பி. முறைப்பாடு!!

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் எஸ் பி திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

“பயங்கரவாத இயக்கத்துடனும், ஸஹ்ரானுடனும் தன்னைத் தொடர்புபடுத்தி மீண்டும் மீண்டும் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து வரும் இவ்விரு அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய்“ என்று அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.