ஒரு குடைக்குள் இரு நாட்டுத் தலைவர்கள்! வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

குறுகிய நேர விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நேற்று இலங்கை வந்து சென்றார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க இந்தியப் பிரதமர் சென்ற போது மழை பெய்து கொண்டிருந்தது.

எனினும் இந்தியப் பிரதமரை குடையுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்து வந்திருந்தார். இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.

ஒரே வாகனத்தில் வந்த நரேந்திர மோதி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு குடைக்குள் நடந்து சென்றுள்ளனர்.

இதற்கு பலர் பல விடயங்களை கூறி வருகின்ற போதிலும், கார் நிறுத்தப்பட்ட இடத்தில் இரண்டு குடைகளை பிடிக்க முடியாது என்பதே உண்மையாக காரணம் என தெரியவந்துள்ளது.

இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாக உள்ள நிலையில், இரண்டு குடைகளை பிடிக்க இடம் போதாமையினால் “நாங்கள் இருவரும் ஒரே குடையில் செல்வோம்” என மோடி, ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாட்டுத் தலைவர்களின் விரும்பத்துடனே ஒரே குடையில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.