போராட்டத்துக்கு ஆதரவு அதிகரிப்பு!!

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும்வரை உண்ணா விரதப்போராட்டத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் , கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவ சிறி க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அளகக்கோன் விஜயரெட்னம் ,சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இவர்களுடன் சமூக அமைப்புக்கள், கல்முனை வாழ் தமிழ் இளைஞர்களும் இணைந்துள்ளனர்.