புலிகள் போதைப்பொருளை விற்று ஆயுதங்களைக் கொள்வனவு செய்தனர்- மைத்திரி

போதைப்பொருள் விற்ற வருமானத்தில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்தனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விற்பனைதான் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வருமானத்தை ஏற்படுத்திக்கொடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார இறுதி நாளையயொட்டி நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் உங்களுக்கு தெரியும். அதை ஒழிக்கும்போது வெற்றிபோல தடைகளும் வருகின்றன.போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நடைபெற்றபோது 9 மாகாணங்களிலும் இது வெற்றிகரமாக கடைப்பிடிக்கப்பட்டது.

30 வருடம் யுத்தம் நடைபெற்றது.போதைப்பொருள் விற்பனைதான் பிராபாகரனின் வருமானம். உலகத்தில் உள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுடன் பிரபாகரனுக்கு தொடர்பு இருந்ததது.உலக யுத்தம் போல உலகில் போதைப்பொருள் வர்த்தகமும் ஒரு தீவிரவாதம்தான். போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பிரபாகரன் ஆயுதங்களை வாங்கினார். யுத்தம் நடத்தினார்.

போதைப்பொருள் ஒழிக்க வேண்டுமாயின் அமெரிக்கா முழுவதும் மரண தண்டனை அமுலாக வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதியே கூறியுள்ளார். போதைப்பொருள் ஒழிப்பில் எனக்கு 40 வருட அனுபவம் உள்ளது. நான் சிறிய பதவியில் இருந்து வந்தபோது போதைப்பொருளுக்கு எதிராக செயற்பட்டேன்.

11ஆயிரம் பேர் இருக்க வசதியுள்ள சிறையில் 24 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களில் 15 ஆயிரம் பேர் போதைப்பொருள் குற்றவாளிகள். இதில் பெண்கள் சிக்கியிருப்பது பரிதாபம். பெண்கள் கூடுதலாக பியர்,சிகரெட், கஞ்சா,வைன் பாவிக்கின்றனர். சிகரெட்தான் எல்லாவற்றிற்கும் ஆரம்பம். வருடந்தோறும் 50 ஆயிரம்பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறை செல்கின்றனர். இவர்களில்பெண்கள் அதிகமாக உள்ளனர்.

இன்று பாடசாலைகளில் இலவமாக போதைப்பொருட்கள வழங்கப்படுகின்றன. அப்படி கொடுத்து அவர்கள் அடிமையான பின்னர் வர்த்தகத்திற்கு அவர்களை பலியாக்குகின்றனர்.ஒரு இனத்தை அழிக்க சிறந்தபொருள்தான் இந்த போதைப்பொருள்.

அரசியலை ஆட்சியாளர்களை தீர்மானிப்பது போதைப்பொருள் வர்த்தகர்கள். ஆனால் நாங்கள் அவற்றுக்கு அஞ்சவில்லை.பல நாடுகளில் இன்னும் மரணதண்டனை அமுலில்தான் உள்ளது.
நாட்டின் தலைவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், உலக நாடுகள் இன்று இதைப்பற்றி பேச ஆரம்பித்துள்ளன.ஜ.நா செயலாளருக்கு நான் இதைப்பற்றி தொலைபேசியில் விளக்கிக் கூறினேன். நாட்டை காப்பாற்றவே இந்த தீர்மானததை எடுத்தேன். ஜூ.எஸ்.பி பிளஸ் தரமாட்டேன் என ஜரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுக்கிறது. இறையாண்மை உள்ள நாடு இது. ஆகவே இவ்வாறு எச்சரிக்கை விடுக்க முடியாது.

கட்சியின் கொள்கை மரண தண்டனை அல்லவெள ஒரு கட்சி கூறுகின்றது.எதிர்க்கட்சி இன்னுமொன்றை கூறுகின்றது.போதைப்பொருள் ஒழிக்க இவர்கள் என்ன செய்தார்கள்.ஒன்றும் செய்யவில்லை. போதைப்பொருள் பாவித்து சீரழிந்த இளைஞர்களின் குடும்பங்களை பாருங்கள்.
புகைப்பிடிப்பது தொடர்பில் சட்டம் கொண்டுவந்ததது போல சட்டங்கள் இயற்றப்படுகின்றன. மரண தண்டனை என்பது நீதிமன்ற தீர்ப்பு. அதனை நான் அமுல்படுத்துகின்றேன். போதைப்பொருள் இப்போது இங்கே குறைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த தாக்குதலுக்கும் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் எங்கோ ஒரு இடத்தில் தொடர்பு உள்ளது. அதனை தான் உறுதியாக கூறுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.