சிறைகளிலுள்ள 94 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு சிவாஜிலிங்கம் கோரிக்கை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டுள்ள 94 தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்று சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் டெலோவின் முக்கியஸ்தரான எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆட்சிபீடம் ஏறியதும் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக வாக்குறுதி அளித்திருந்ததையும் சிறிலங்கா ஜனாதிபதிக்கு ஞாபகப்படுத்தியுள்ள நிலையிலேயே வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள இந்தக் கடிதத்தின் பிரதிகள், பிரதமர், எதிர்கட்சித் தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கம் சிவாஜிலிங்கம் அனுப்பிவைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.