போராட்டங்களை மீறியும் யாழில் 5G வேலைத்திட்டம் தீவிரம்.

இணைய வேகத்தையும், புதிய தொழில்நுட்ப புரட்சியையும் மேம்படுத்தும் வகையில் 4G தொழில்நுட்பத்திற்கு பிறகு உலகம் முழுவதும் 5G அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகள் தங்கள் நாடுகளில் போட்டி போட்டு 5G அலைகற்றையை நிறுவி வரும் தில்லையில் தெற்காசியாவில் முதல் முறையாக இலங்கை தனது 5G சோதனையை நிறைவு செய்தது.

இலங்கை வடபகுதியின் கலாச்சார நகரமான யாழ்ப்பாணத்தில் இலங்கையின் முதல் தர நிலையில் உள்ள இரண்டு நிறுவனங்கள் யாழ் மாநகர சபையின் அனுமதியுடன் தீவகம் தவிர யாழ் மாவட்டம் முழுவதும் 5ஆம் தலைமுறை (5G) பரிவர்த்தனைகளுக்கான அலைக்கற்றைகளை நிறுவுகின்றன.

இவ் அலைக்கற்றைகளின் எதிர்கால பிரதிகூலங்களை மட்டும் கருத்தில் கொண்டு குருநகர் பகுதியல் அவ் இடவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டங்களை அடுத்து தான் ஊடகங்களுக்கு யாழில் 5G அலைக்கற்றை நிறுவப்பட்டுள்ளது குறித்து தெரிய வந்துள்ளது. அது மட்டும் பிக்பாஸ் மற்றும் உலக நிகழ்வுகளுக்கு தங்கள் பார்வையை வைத்து கொண்டு இருந்தது என்று மக்கள் கூறுகின்றனர்.

5G அலைகற்றைகளை நிறுவிய நிறுவனங்களில் ஒன்று இது மின்கம்பம் என்றும் 5G CCTV என்று கூறாமல் CCTV கம்பம் என்றும் மக்களிடையே கூறியுள்ளனர்.

இத் தேவையில்லாத பொய் பிரசாரம் மக்களிடையே கோபத்தையும், அச்சத்தையும் கொண்டுவந்துள்ளது. இதன்காரணமாக 5ஆம் தலைமுறை (5G) தரவு பாரிமாற்ற சேவை ஒன்றும் தங்களுக்கு தேவையில்லை என மக்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனாலும் பல கோடி கணக்கில் செலவு செய்து கொண்டு வந்த 5G அலைகற்றைகளை நிறுவுவதில் எந்த இடையூறும் இல்லாமல் யாழ் மாவட்டங்களில் இவ் வேலைத்திட்டம் தீவிரம் அடைந்து வருகின்றது.

இதன் மூலம் 5G தொழில்நுட்பத்தின் நன்மைக்கும் தீமைக்கும் முதல் முகம் கொடுக்க போகின்றனர் யாழ் மக்கள். இது குறித்து சந்தோசபடுவதா கவலைபடுவதா என்று இவர்களுக்கே தெரியவில்லை.

இதையும் படியுங்கள்

5G தொழில்நுட்பத்தின் விளைவுகள்..