இலங்கை பெண்களில் சிலர் பியர் அடிக்கின்றனர் – மைத்திரி

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கும், சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புக்கும் சம்பந்தம் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு மேல் மாகாண மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பில் சில சர்வதேச அமைப்புக்கள் இன்று இலங்கைக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றன.

எனினும், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு சர்வதேச அமைப்புக்களின் உதவி அவசியம் என்றாலும், நாட்டின் அபிவிருத்தியில் தலையிடுவதற்கோ அல்லது அதன் இறைமைக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ எவருக்கும் உரிமை கிடையாது.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் இரகசியமானதல்ல.

போதைப்பொருள் பிரச்சினையிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு எத்தனை அரசியல்வாதிகள் தமது பொறுப்பை நிறைவேற்றுகின்றார்கள் என்பது கேள்விக்குரியதாகும்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கும், சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புக்கும் சம்பந்தம் உள்ளது.

அத்துடன் தற்போது பெண்கள் அதிகம் பியர், வைன் போன்ற மதுபானங்களை அதிகம் அருந்துகின்றனர். இதன் மூலம் சிகரெட், கஞ்சா போன்ற போதைப்பொருள்களுக்கு அடிமையாகியுள்ளனர்.

பெண்கள் அதிகமாகப் போதைப்பொருள்களை பயன்படுத்துவதே இலங்கை தற்போது எதிர்நோக்கியிருக்கும் புதிய சவால்.

மேலும் போதைப்பொருள் பாவனையால் வருடாந்தம் 50,000இற்கும் அதிகமானோர் சிறைக்கு செல்கின்ற நிலையில் இதில் அதிகமானோர் பெண்கள் என குறிப்பிட்டுள்ளார்.