நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு இரணைதீவு மக்கள் கோரிக்கை!

கிளிநொச்சி இரணைதீவு பகுதி மக்களின் மருத்துவத்தேவைகளுக்கு ஏற்ற வகையில் நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்படட இரணைதீவுப் பகுதியில் மக்கள் மீள்குடியேறியதையடுத்து குறித்த பிரதேச மக்களின் மருத்துவத்தேவை நிவர்த்தி செய்யப்படுவதில் காலதாமதங்கள் காணப்படுகின்றன.

 எனத்தெரிவித்த இரணைதீவு மக்கள் இரணைதீவிலிருந்துநோயாளிகளைக்  கொண்டு செல்வதற்கு ஏற்றவகையில் நோயாளர்களுக்கான படகுச்சேவையை மேற்கொள்ள சம்பந்தப்படட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூர்வீகமாக மக்கள் வாழ்ந்த குறித்த தீவில் வெளியேற்றப்பட்டு இருபத்தி எட்டு வருடங்களின் பின்னர் சொந்த இடத்தில் குடியமர அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இங்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாவிட்டாலும் மருத்துவ வசதி என்பது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்;படுவதனால் இந்த மருத்துவவசதியை ஏற்படுத்தித்தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.