முப்படையினரின் பாதுகாப்புடன் மடுத் திருவிழா நிறைவு!!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி முப்படையினரின் விசேட பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மாணுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் கலாநிதி அன்ரனி ஜெயகொடி ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியாக திருவிழா திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து திருச் சொரூப பவணியும், ஆசியும் வழங்கப்பட்டது.