உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் பரீட்சார்த்திகளுக்கு நாளையதினம் வெளியிடப்படுகிறது முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் நாளையதினம் பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது.

இது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவிக்கையில்

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம்காரணமாக உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ளமுடியவில்லை.

எனவே தனியார் பரீட்சார்த்திகள் www.doenets.lk / http://www.slexams.com என்ற இணையத்தளத்தின் ஊடாக தமது அனமதி அட்டைகளை பெற்றுக்கொள்ளமுடியும் எனத் தெரிவித்தார்.

எதிர்வரும் 05 ஆம் திகதி தொடங்கி 31 ஆம் திகதி நிறைவடையவுள்ள உயர்தர பரீட்சை நாடளாவிய ரீதியில் 2678 பரீட்சைநிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.