நெல்லியடியில் அதிகாலை நடந்த துயரம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளும் டிப்பரும் மோதிக் கொண்டதனாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மோட்டார் சைக்கிளும் டிப்பரும் மோதிக் கொண்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காரணவாய் வடக்கு பகுதியை சேர்ந்த முகுந்தன் டிசாந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.