கோத்தாபய என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் பொதுஜன பெரமுன ஒன்றிணைந்தாலும் எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ என்ற தீர்மானத்தில் எந்நிலையிலும் மாற்றம் ஏற்படாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது ஜனாதிபதி வேட்பாளர் விவகாரமே பாரிய பிளவினை ஏற்படுத்தியுள்ளது.முரண்பாடுகளுக்கு மத்தியில் அரசாங்கத்தை ஒரு கட்சியால ஒருபோதும் சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியாது.  அனைத்து செயற்பாடுகளுக்கும் நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற தேசிய மாணிக்ககல் கண்காட்சி திறப்பு விழாவில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.