எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார்? வெற்றிபெறுவார் என்பது குறித்து Green University மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றிபெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவரை எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச மிகவும் குறைந்த வாக்குகளையே பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச 17 வீதமான வாக்குகளையே பெற்றுக்கொள்வார் என அந்த கணக்கெடுப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

900 மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில் கோத்தபாய ராஜபக்ச 59 வீதமான வாக்குகளை பெற்றுள்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் பேராதனை பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துகணிப்பின் முடிவுகளும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.