பலாலி இராணுவ முகாமிற்குள் புகுந்த மர்மநபர்கள் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக பாதுகாப்பு தரப்பினரை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளன.

இன்று அதிகாலை பலாலி இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்ய தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

எனினும் இந்தத் தகவலை பாதுகாப்பு தரப்பினர் மறுத்துள்ளனர். முச்சக்கரவண்டியில் வந்த மர்மநபர்களே அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக நெஞ்சு மற்றும் கால் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

20 வயதான இராணுவ சிப்பாய் மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.