செப்டம்பர் 15 ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுமா?

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை விடுக்கும் முழு அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் தனக்கு வழங்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சிறந்த திகதி எதிர்வரும் நவம்பர் 15 ஆகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு கோரல் அறிவிப்பை விடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.