உலக கடல் மட்டத்தை ஒரு மில்லிமீட்டருக்கும் மேல் உயர்த்துவதற்கு ஏதுவான பனி உருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கிறீன்லாந்தின் பெரும்பாலான பனி படலங்கள் இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க அளவு உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அவற்றில் உலக கடல் மட்டத்தை உயர்த்தும் மிகப் பெரிய பனிப்பாறையும் உருகியிருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள கடற்கரைகளை அண்டிய நகரங்களின் எதிர்காலம் தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டிருப்பதாகவும், பலர் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தெற்கு கிறீன்லாந்தில் ஒரு பனிப்பாறை இறுதியாக 2004 ஆம் ஆண்டில் இலிருந்து 100 மீட்டர் வரை உருகிவிட்டதாக டென்மார்க்கைச் சேர்ந்த ஜேசன் பொக்ஸ் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.