காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 6000 ரூபா மாதாந்த கொடுப்பனவு

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபாவை மாதாந்த கொடுப்பனவாக வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரையின்படி இந்த இடைக்கால நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

இதன்படி இந்த இடைக்கால நிவாரண கொடுப்பனவு எதிர்வரும் ஒக்டோபரில் இருந்து ‘பிரசன்னமின்மை சான்றிதழை’ பெற்ற காணாமலாக்கப்பட்ட அவர்களின் உறவுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.