பிரித்தானியாவில் 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் அவருடைய தந்தை குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த டிஃப்பனி டேட் (21) என்கிற தாய் கடந்த ஆண்டு 8 மாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் தனக்கு குழந்தை பிறக்கவிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆனால் அவர் எதிர்பார்த்ததைவிட அடுத்த சில நாட்களில் குறை மாதத்திலே அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மருத்துவ குறைபாடுகளுடன் குழந்தை பிறந்திருந்ததால் 4 வாரங்கள் ருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது.

பின்னர் வீட்டிற்கு சென்றடைந்ததும் டிஃப்பனி தன்னுடைய குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். அதற்கு கீழே அவருடைய கணவர் மைக்கேல் ரோ (32), “என் இரண்டு அழகான பெண்கள். உங்களை மிகவும் நேசிக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படம் வெளியிட்ட அடுத்த ஒரு மாதத்தில், திடீரென குழந்தை மூச்சுவிட சிரமப்படுவதாக ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் உடனடியாக குழந்தை மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் துரதிஷ்டவசமாக குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தை இறந்த மறுநாள், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, குழந்தையின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிஸார், மைக்கேல் ரோ-வை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், மைக்கேல் ரோ குழந்தையை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இந்த சம்பவத்திற்கு குழந்தையின் தாயும் உடந்தை என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.