பாணின் விலையும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 2 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலையானது 5.50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாணின் விலையை மாத்திரம் அதிகரிக்க முடிவுசெய்துள்ளபோதிலும், ஏனைய பேக்கரி உணவுப் பொருட்களில் மாற்றம் எதுவும் மேற்கொள்ள தீர்மானிக்கப்படவில்லை.

எவ்வாறெனினும் பிறிமா நிறுவனமானது தன்னிச்சையாக கோதுமை மாவின் விலையை அதிகரிப்பு செய்தமைக்காக நுவர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.