தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் முதல் பலருக்கும் இதுவரை 800-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள பிரபல பாடலாசிரியர் முத்துவிஜயன் நேற்று உயிரிழந்துள்ளார்.

எழில் இயக்கிய துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் மேகமாய் வந்துப் போகிறேன், வெண்ணிலா உன்னைத் தேடினேன்…’ என்ற பாடலின் மூலம் பாடலாசரியராக அறிமுகமானவர். 

அதன் பிறகு பெண்ணின் மனதைக் தொட்டு படத்தில், கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…’ பாடலின் மூலம் மேலும் புகழ்பெற்றார்.

மஞ்சள் காமாலை நோயினால் கல்லீரல் பாதிக்கப்பட்ட முத்து விஜயன் நேற்று மாலை 4 மணிக்கு உயிரிழந்துள்ளார். 

கவிஞர் தேன்மொழியை காதல் திருமணம் செய்து, பிறகு விவாகரத்து பெற்ற முத்துவிஜயன் சமீபகாலமாக தமிழ் திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தில் தங்கியிருந்தார்.